செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கோர விபத்தில் நால்வர் மரணம்! – மூவர் படுகாயம்

கோர விபத்தில் நால்வர் மரணம்! – மூவர் படுகாயம்

0 minutes read

தம்புத்தேகம – ஹிரியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வீட்டை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வாகனமொன்றே, லொறியொன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் சாரதியான கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த மௌலானா அகமது (வயது 46), ஜைனு அஹப்துல் சாபா (வயது 46), அகமது மௌலானா (வயது 43), அப்துல் ரஹ்மான் முகமது ரசீம் (வயது 36) ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர.

காயமடைந்தவர்களில் மூவர் தம்புத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.