December 4, 2023 6:28 am

யாழில் வாள்வெட்டு! – இளைஞர் படுகாயம்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

முகநூலில் தம்மைப் பற்றி பதிவிட்டவர் மீது வன்முறைக் கும்பல் ஒன்று நேற்று இரவு வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் மீதே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

வெள்ளை நிற கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வன்முறைக் கும்பலாக அடையாளம் காணப்பட்டுள்ள கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்தக் கும்பலைப் பற்றி தனது முகநூலில் தாக்குதலுக்கு இலக்கான நபர் பதிவிட்டு இருந்த நிலையிலையே வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்