திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ரயிலில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார்.
நேற்றிரவு திருகோணமலையில் இருந்து கொழும்புக்குச் செல்லும் ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்துள்ளார்.
இலக்கம் 845/10, முள்ளிப்பொத்தானை எனும் முகவரியைச் சேர்ந்த தாவூது சலீம் என்ற குடும்பஸ்தரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார்.
குடிபோதையில் மூவர் மது அருந்திவிட்டு வீடு திரும்பும்போது உயிரிழந்தவர் தண்டவாளத்தில் உறங்கினார் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.