செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு! – அமைச்சரவை அங்கீகாரம்

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு! – அமைச்சரவை அங்கீகாரம்

0 minutes read

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்தக் கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.