செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ்த் தலைவர்களைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!

தமிழ்த் தலைவர்களைச் சந்தித்த இந்தியத் தூதுவர்!

1 minutes read

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்று மாலை இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது.

இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, இந்நாள் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., அக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் எம்.பி., அந்த அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் எம்.பி., தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி., தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை. மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்களை அறியமுடியவில்லை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.