செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மரதன் போட்டியில் பங்குபற்றிய மாணவன் சாவு! – திருக்கோவிலில் அமைதியின்மை

மரதன் போட்டியில் பங்குபற்றிய மாணவன் சாவு! – திருக்கோவிலில் அமைதியின்மை

0 minutes read
மரதன் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் அம்பாறை, அக்கரைப்பற்று – திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது.

திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியுடன் இணைந்ததாக இடம்பெற்ற மரதன் போட்டியில் பங்கேற்றிருந்த மேற்படி மாணவன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய விதுர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

வைத்தியசாலை நிர்வாகத்தினரது அசமந்தப்போக்கு காரணமாகவே மாணவன் உயிரிழந்தார் எனக் கூறி பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருக்கோவில் வைத்தியசாலை வளாகத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.