புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடமராட்சியில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

வடமராட்சியில் கஞ்சா வியாபாரியை மடக்கிப் பிடித்த பொலிஸார்!

0 minutes read
யாழ்ப்பாணம, வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் மந்திகையில் வைத்து நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி, கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்று பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்படி இளைஞரைச் சில நாட்களாகத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று கஞ்சாவை விற்பனைக்காக மந்திகைக்கு எடுத்துச் சென்றபோது அங்கு வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞரின் உடைமையில் இருந்து 2 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சந்தேகநபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.