திருகோணமலை மாவட்டம், சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள கணேசபுரம் பகுதியிலுள்ள கணேசபுரம் பிரதான வீதியில் காட்டு யானை தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மூதூர் – கட்டைப்பறிச்சான் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய வயோதிபர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த வயோதிபர், தனது வயலுக்குக் குருவிக் காவலுக்குச் சென்றபோது கணேசபுரம் வீதியில் வைத்து காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.