அரச மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ரவி குமுதேஷ் நிறுவன விதிகளை மீறி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த இடைநீக்கம் அவர் வேட்புமனுவில் கையெழுத்திட்ட நாளான 10.10.2024 முதல் அமுலுக்கு வரும் என்றும், இடைநீக்க காலத்தில் அவருக்குச் சம்பளமோ அல்லது கொடுப்பனவுகளோ வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்ட ரவி குமுதேஷ், நிறுவன விதிகளை மீறியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதோடு, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் வரை அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.