யாழ். வடமராட்சி – பொலிகண்டியைச் சேர்ந்த வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மாணவ ஆசிரியர் செல்வன். சிவலிங்கம் சபேசனின் ‘விஞ்ஞான வினாடி வினாப் புதிர்கள்’ நூல் வெளியீடு அண்மையில் வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி கலாநிதி குணரட்ணம் கமலகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நூல் ஆய்வுரையை விரிவுரையாளர் எஸ்.சுகுமார் ஆற்றினார்.
நூலாசிரியரான செல்வன். சிவலிங்கம் சபேசன் ஏற்புரையை வழங்கினார்.