செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள்! – பிளாஸ்டிக் மாலை, ஆடைகள், நாணயக் குற்றிகள் என்பனவும் அடையாளம் (படங்கள் இணைப்பு)

செம்மணியில் மேலும் 5 எலும்புக்கூடுகள்! – பிளாஸ்டிக் மாலை, ஆடைகள், நாணயக் குற்றிகள் என்பனவும் அடையாளம் (படங்கள் இணைப்பு)

1 minutes read

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 12 ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய அகழ்வின் போது 5 என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 52 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 47 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் குழப்பகரமான முறையில் குவியல்களாக இருந்த 4 மனித எச்சங்களும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழியில் இருந்து பிளாஸ்டிக் மாலை, ஆடைகள், நாணயக் குற்றிகள் என்பனவும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளன.

யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல், சட்டத்தரணிகளான ஞா.ரனிதா, வி.கே.நிரஞ்சன், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.