அனைத்துலகத் தமிழர் பேரவை வாழ்த்து
மனித உரிமைகள், நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக அர்ப்பணித்துக் கலாநிதி நவநீதம் ‘நவி’ பிள்ளை ஆற்றிவரும் வாழ்நாள் பணிக்கான மிக உயரிய அங்கீகாரமாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசுக்கு அமைந்திருப்பதாக அனைத்துலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஒருக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்துவந்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்பான அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைவர் நிர்மல் விநாயகமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளிக் குடும்பத்தில் பிறந்த நவநீதம் பிள்ளை, நிறவெறி ஆட்சியின் அநீதிகளை எதிர்கொண்டு, சுயசேத மட்டத்திலான தலைமைத்துவத்திற்கும் உயர்ந்த மனிதநேயத்திற்கும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பெருமிதத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறார். அவரது சாதனைகள் அவரது தமிழ் பூர்வீகத்தின் வலிமையையும் பலம்பெறப்பெயர்ந்தோரின் அடுத்த தலைமுறைகள் தாம் வாழும் நாடுகளுக்கும் மனிதகுலத்துக்கும் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பையும் காண்பிக்கின்றன.
நவநீதம் பிள்ளை 2008–2014 வரையான காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார்.
கல்வி, சம வாய்ப்புக்கள், சமூகப்பங்கேற்பு மற்றும் தலைமைத்துவத்தின் ஊடாகப் புலம்பெயர்ந்த மக்களையும் சமூகங்களையும் வலுப்படுத்தவேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த அங்கீகாரம் அடிக்கோடிட்டுக் காண்பிக்கின்றது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் நலிவுற்ற சமூகங்கள் தடைகளைக் கடந்து, தமது முழுத்திறனையும் வெளிப்படுத்துவதற்கு ஊக்கமளிக்கும் பயணம் எம்மை ஊக்குவிக்கின்றது.
நவநீதம் பிள்ளையின் இந்தச் சாதனையை நாம் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுணர்வுடனும் கொண்டாடுகின்றோம். மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், பாரபட்சங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்கவும், நீதியும் அமைதியும் நிறைந்த உலகைக் கட்டியெழுப்பவும் அவரது துணிவும் அர்ப்பணிப்பும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழிகாட்டட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.