செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா பிரெக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்க-பிரித்தானிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல்

பிரெக்ஸிட் ஒப்பந்தம் அமெரிக்க-பிரித்தானிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல்

0 minutes read

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிட் உடன்படிக்கையானது, அந்த அமைப்பிற்கு சிறந்தது எனக் கருத்துக்கள் வெளியிட்டாலும், பிரித்தானியாவுக்கு தமது நாட்டுடன் வர்த்தகம் மேற்கொள்ள முடியாமற்போகும் நிலை தோன்றலாம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியா உலகளாவிய ரீதியில் எந்த நாட்டுடனும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியுமென பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், வெள்ளை மாளிகைக்கு வெளியே ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது குறித்த ஒப்பந்தத்தை எடுத்துப்பார்த்தால் கூட, பிரித்தானியாவுக்கு தமது நாட்டுடன் வர்த்தகம் எதனையும் மேற்கொள்ள முடியாமற் போகும் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இது ஒரு நல்ல செயற்பாடு அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.