அமெரிக்க அதிபரின் செயலால் அதிர்ந்து போன மருத்துவ உலகம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசி மூலம் கிருமிநாசினியை செலுத்தி சிகிச்சை அளிக்கலாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் நகைச்சுவையாக அவ்வாறு தெரிவித்ததாக ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அதிபர் ட்ரம்ப், கிருமிநாசினிகளால் கொரோனா வைரசை ஒரு நிமிடத்தில் கொல்ல முடியுமானால், புறஊதா கதிர் ஒளிக்கற்றை வெப்பம் மூலமாகவும், கிருமிநாசினிகளை உடலில் செலுத்திக்கொள்வதன் மூலமாகவும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியிருந்தார்.

அமெரிக்க அதிபரின் இந்த அபாயகரமான அறிவுரை அந்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளையும் அதிர வைத்தது.இதனால் பதறிப்போன கிருமிநாசினி தயாரிப்பு நிறுவனங்களும், மருத்துவர்களும் கிருமிநாசினிகளை உடலுக்குள் செலுத்துவது மிகவும் அபாயகரமானது என்று எச்சரிக்கை விடுத்தனர்.

பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இந்த கருத்து பற்றி விளக்கம் அளித்துள்ள ட்ரம்ப், தாம் அந்த அறிவுரையை கூறியதுநகைச்சுவைக்காகவே  என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்