
உலக வாழ் இந்துக்களால் மகாசிவராத்திரி விரதம் விமர்சையாக இன்றையதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இன்று இலங்கையில் பல பாகங்களிலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதம் மற்றும் சிறப்பு பூஜையை மேற்கொள்வார்கள்.
இதனை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
உண்மைத்தன்மை, தியாக மனப்பான்மை மற்றும் மன்னிப்பு வழங்கல் போன்ற உண்மைக் குணங்களுடன் வாழ வழியமைக்கும் மஹா சிவராத்திரி தின செய்தியானது, ஒற்றுமையை பலப்படுத்தட்டும்.
ஆன்மீக சிந்தனை, உத்வேகம் மற்றும் வீரத்தைக் குறிக்கும் சிவனிரவு, நோக்கங்களை அடையும் நன்னாளாக அமைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.