
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் உள்ள இரணைப்பாலைப் பகுதியில் முதன் முதலாக மார்ச் மாதம் வெடிக்காத நிலையிலிருந்த கொத்துக்குண்டினைப் (cluster Bomb ) பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருந்தது .இது ஆட்டிலெறி மூலம் ஏவப்பட்டதாகவே அன்றைய காலப்பகுதியில் அறியப்பட்டிருந்தன.
அது எம்மூரில் மேசன்மார் மட்டம் பார்க்க பயன்படுத்தும் தூக்குக்குண்டினைப் போல் வடிவம் கொண்டும் அதனோடு வர்ண ரிப்பன் பட்டியும் இணைத்திருந்தது.
அது வெடிக்காமல் கீழே இருந்தால் சிறுவர்களை , மக்களைக் கவரும் வண்ணமும் அதனை அவர்கள் கண்ணுற்றால் அதனை எடுக்கத் தூண்டுமளவுக்கு வினோதமாகவும் இருக்கும். அவ்வாறு எடுத்து அந்த ரிப்பன் பட்டியை இழுத்தால் அது வெடிக்கக்கூடியவாறான பொறிமுறையைக் கொண்டமைக்கப்பட்டதாகும். ஒரு குண்டு பரந்த பிரதேசத்தை பரவித் தாக்கும் தாக்குதிறன் வாய்ந்தது.
வானத்தில் வெடிக்கும்பொழுதும் பார்த்திருந்தேன். வாணவேடிக்கை மத்தாப்புக்கள் வானத்தில் வெடித்துச் சிதறுவதைப்போல் ஒரு தனி பெருங்குண்டு நூற்றுக்கணக்கான குண்டுகளாக சிதறி அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக கீழே வந்து மீண்டும் வெடிக்கும். அவ்வாறு வெடிக்கும் குண்டுகள் மனிதர்களுக்கு பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்த வல்லவை ஆகும்.
நன்றி – முகநூல்