செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் “விக்ரம்” பட வெளியீடு அறிவிப்பு

“விக்ரம்” பட வெளியீடு அறிவிப்பு

1 minutes read

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஊரடங்கு காரணமாகவும் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினாலும் விக்ரம் படப்பிடிப்பு தாமதமானது. அதன்பின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

விக்ரம் படத்தின் அறிவிப்பு
நேற்று விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு வீடியோ பதிவின் மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகவிருக்கும் திகதியை மார்ச் 14, 2022 அன்று காலை 7 மணிக்கு அறிவிக்கயிருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.