
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் 29 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கும் முச்சக்கர வண்டி சாரதிக்கும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், முச்சக்கர வண்டி சாரதி மோட்டார் சைக்கிள் ஓட்டுநருரை கூரிய ஆதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். தாக்குதலின் பின்னர் முச்சக்கர வண்டிச் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த நபர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு 14 சேர்ந்த 29 வயதான இளைஞராவார்.
தலைமறைவாகியிருந்த முச்சக்கர வண்டி சாரதியான சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.