செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

1 minutes read

பூஜா ஹெக்டே தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள பீஸ்ட் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த போது பட நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறி அதிக செலவு வைத்து சர்ச்சையில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பூஜா ஹெக்டே பெற்றோருடன் மும்பையில் வசிக்கிறார்.

படப்பிடிப்புக்காக சென்னை அல்லது ஐதராபாத்துக்கு வரும்போது தன்னுடன் சிகை அலங்கார நிபுணர், ஆடை வடிவமைப்பாளர் உள்ளிட்ட 10 முதல் 12 உதவியாளர்களை அழைத்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூஜா ஹெக்டே பீஸ்ட் படப்பிடிப்பின்போது உதவியாளர்களுக்காக அநாவசியமான செலவுகளை செய்ய கூடாது என்று அவரிடம் அறிவுறுத்தப்பட்டு இருந்ததாம்.

சமீபத்தில் படத்தின் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது அதிக உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பட நிறுவனத்தின் பணத்தில் பூஜா ஹெக்டே செலவு செய்தது தெரியவந்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து உதவியாளர்களுக்கான ஓட்டல், சாப்பாடு உள்ளிட்ட செலவு பில்களை பூஜா ஹெக்டேவுக்கு அனுப்பி அந்த பணத்தை திருப்பி தரவேண்டும் என்று கண்டிப்பான அறிவுறுத்தல் விடுத்து இருப்பதாகவும், இதனால் அதிர்ச்சியான பூஜா ஹெக்டே பணத்தை கட்டி விட தயாராகி வருவதாகவும் திரைப்பட உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.