செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ‘ஏகே 61′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

‘ஏகே 61′ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

1 minutes read

அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏகே 61′. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு பாங்காக் நகரில் நடைபெற இருப்பதாகவும் இந்த படப்பிடிப்புக்காக படக்குழுவினர் பாங்காக் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இந்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்று அல்லது நாளை பாங்காக் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ‘ஏகே 61′ திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளி வந்தது

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘துணிவு’ என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மாஸான லுக்கில் அஜித் கையில் துப்பாக்கியுடன் படுத்திருப்பது போல் அமைந்துள்ள இந்த போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.