செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! – டலஸ் அணி எச்சரிக்கை

தேர்தல் இல்லையேல் போராட்டம் வெடிக்கும்! – டலஸ் அணி எச்சரிக்கை

0 minutes read

“நாட்டு மக்களின் மனநிலை என்னவென்பதை அறிவதற்குக் குறைந்தபட்சம் உள்ளூராட்சி சபைத் தேர்தலாவது நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.”

– இவ்வாறு டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒருபோதும் அரசியல் உறவைப் புதுப்பித்துக்கொள்ளப்போவதில்லை என்றும் சுதந்திர மக்கள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சபையின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன கூறியதாவது:-

“தற்போதைய நாடாளுமன்றம், மக்கள் எதிர்பார்ப்பைப் பிரதிபதிக்கவில்லை. எனவே, புதிய மாற்றமொன்றை மக்கள் வலியுறுத்துகின்றனர். புதியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர்.

தேர்தல் நடைபெற்றால் நாம் வெற்றிபெறுவோம். வெல்லும் அணியில் நாம் பிரதான பங்காளியாக இருப்போம். ‘மொட்டு’க் கட்சியுடன் இனி அரசியல் உறவு இல்லை. தேர்தலில் அவர்களுடன் சேர்ந்து போட்டியிடவும் மாட்டோம்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.