செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறுமியைச் சீரழிக்க முயற்சி! – முதியவர் நையப்புடைப்பு

சிறுமியைச் சீரழிக்க முயற்சி! – முதியவர் நையப்புடைப்பு

0 minutes read

யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுகுட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவர் இளைஞர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியிலுள்ள பலசரக்கு கடைக்குப் பொருள்களைக் கொள்வனவு செய்வதற்கு 10 வயது சிறுமி தனியாக வந்துள்ளார். கடையில் வேறு எவரும் இல்லாத நிலையில், கடையினுள் சிறுமியைத் தள்ளி பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்வதற்கு 72 வயது முதியவர் முயற்சித்துள்ளார்.

அந்த நேரம் அந்தப் பகுதியால் சென்ற இளைஞர்கள், சிறுமியின் சத்தம் கேட்டு கடையினுள் சென்று பார்த்தபோது துஷ்பிரயோக முயற்சி தெரியவந்துள்ளது.

இதையடுத்து முதியவரை இளைஞர்கள் ‘முறையாகக் கவனித்துள்ளனர்’. அதன் பின்னர் மானிப்பாய் பொலிஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.