செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சகல எதிரணிகளும் ஒன்றிணைய வேண்டும்! – டலஸ் அணி கோரிக்கை

சகல எதிரணிகளும் ஒன்றிணைய வேண்டும்! – டலஸ் அணி கோரிக்கை

0 minutes read

“எதிர்க்கட்சிகளுக்கிடையிலான சொற்போர் முடிவுக்கு வரவேண்டும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து பரந்துபட்ட கூட்டணியை அமைக்க வேண்டும்.”

– இவ்வாறு மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறி டலஸ் அணியுடன் சங்கமித்துள்ள பேராசிரியர் சரித ஹேரத் எம்.பி. தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“தேர்தலை ஒத்திவைத்து, மக்களை அடக்கி ஆளலாம் என நினைத்த ஆட்சியாளர்கள் படுதோல்வி அடைந்ததே இந்நாட்டு வரலாறு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எதிரணிகளுக்கே மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளனர்.

தற்போதைய அரசு தேர்தலை நடத்தாது என்றே எண்ணத் தோன்றுகின்றது. எனவே, எதிரணிகள் தம்மிடையிலான விமர்சனங்களை விடுத்து, ஜனநாயகத்தைப் பாதுகாக்கப் பரந்துபட்ட கூட்டணியாக ஒன்றுபட வேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.