செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கோர விபத்து! கணவன் பலி; மனைவி படுகாயம்!!

யாழில் கோர விபத்து! கணவன் பலி; மனைவி படுகாயம்!!

0 minutes read

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் தண்ணீர் தாங்கி வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – ஏ 9 பிரதான வீதியின் செம்மணி வளைவுக்கு அண்மையில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (வயது – 31) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரைச் சேர்ந்த அவரது மனைவி துரைராஜ் முகுந்தினி (வயது -26) படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.