செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் மறைந்த ராணி எலிசபெத் பெயரில் பிரான்ஸில் விமான நிலையம்!

மறைந்த ராணி எலிசபெத் பெயரில் பிரான்ஸில் விமான நிலையம்!

1 minutes read

பிரான்ஸில் விமான நிலையம் ஒன்றின் பெயர் இங்கிலாந்தின் மறைந்த இரண்டாம் எலிசபெத் ராணியின் பெயரில் மாற்றப்படவுள்ளது.

இதற்காக அனுமதியை, இங்கிலாந்து மன்னரிடமிருந்து பிரான்ஸின் வடபகுதியில் உள்ள Le Touquet என்ற பிரதேச அதிகாரிகள் பெற்றுள்ளனர்.

தற்போது Touquet Paris Plage என்ற பெயரையுடை விமான நிலையமே Elizabeth II Le Touquet Paris Plage அனைத்துலக விமான நிலையம் என பெயர் மாற்றப்படவுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பெயர் மாற்றம் எப்போது செயற்படுத்தப்படும் என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

பிரான்ஸில் உள்ள சுற்றுலாத்தலங்களில் இங்கிலாந்தின் அம்சங்களை அதிகமாகக் கொண்டது Le Touquet பிரதேசம் என்பதால் மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்த விரும்புவதாக குறித்த நகர மன்றம் தெரிவித்துள்ளது.

அத்துடன், விமான நிலைய பெயர் மாற்றத்தால் Le Touquet பிரதேசத்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையிலான தொடர்பு வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்தோரை வரவேற்பதற்காக 1930களில் Touquet Paris Plage விமான நிலையம் கட்டப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.