செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் பிரான்ஸ் கல்லூரிகளில் புர்கா அணிவதற்குத் தடை

பிரான்ஸ் கல்லூரிகளில் புர்கா அணிவதற்குத் தடை

0 minutes read

பிரான்ஸ் கல்லூரிகளில் புர்கா அணிவதற்குத் தடை விதிக்கப்படவுள்ளது.

புர்கா, ஒரு சமய ஆடை என்றும் புர்கா அணிதல் கல்வி அமைச்சின் கடுமையான சமயச் சார்பற்ற விதிமுறைகளை மீறுவதாகவும் அந்நாட்டுக் கல்வி அமைச்சர் கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) தெரிவித்துள்ளார்.

ஆனால், அது தனியுரிமைகளை மீறுவதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

கல்லூரிகளில் அதிகமான பெண்கள் புர்கா அணிவதால் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையே சர்ச்சை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும் செய்தி : தேசிய பூங்காவுக்குச் செல்ல பெண்களுக்கு தடை

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி பிரான்ஸில் மாணவர்கள் கல்லூரித் திரும்பவுள்ளனர்.

அதற்கு முன்பு தேசிய அளவில் கல்லூரித் தலைவர்களுக்குத் தெளிவான விதிமுறைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் அட்டால் மேலும் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் கல்லூரிகளில் முக்காடு அணிவதற்கு எதிரான தடை ஏற்கெனவே பல ஆண்டுகளாக நடப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்: AFP

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.