செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ‘iPhone 15’ கைத்தொலைபேசி பற்றி பயனாளர்கள் குறைகூறல்!

‘iPhone 15’ கைத்தொலைபேசி பற்றி பயனாளர்கள் குறைகூறல்!

0 minutes read

Apple நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iPhone 15 கைத்தொலைபேசி பற்றிக் குறைகூறல்கள் எழுந்துள்ளன.

சாதனத்தைப் பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும்போதோ iPhone மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனாளர்கள் சிலர் கூறினர்.

மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ, மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது FaceTime வீடியோ மூலமாகப் பேசும்போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய A17 சில்லுவால் பிரச்சினை ஏற்படுகிறதா என்ற கேள்வி வந்துள்ளது.

புதிய சாதனங்களைப் பயன்படுத்தும்போதும் குறிப்பிட்ட சில செயலிகளைப் பயன்படுத்தும்போதும் அவ்வாறு நேர்வது வழக்கம் என்று Apple நிறுவனம் கூறுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.