இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், வாகனங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கவும், சுமார் 2,000 வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் மக்கள் கார்களில் சிக்கி, தற்காலிக தங்குமிடங்களில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மாலை முதல் பனி மற்றும் பனிப் பொழிவுக்கான எச்சரிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.
வடக்கு இங்கிலாந்து, மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கு வேல்ஸ் ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவுக்கான வானிலை அலுவலக மஞ்சள் எச்சரிக்கை நேற்றுப் பிற்பகல் ஐந்து மணி முதல் இன்று திங்கள் மதியம் வரை விடுக்கப்பட்டுள்ளது.
கடினமான பயண நிலைமைகள் இருக்கலாம் என்னும் வீதிகள் மற்றும் நடைபாதைகளில் பனிக்கட்டி திட்டுகள் இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஸ்காட்லாந்தில், பனி மற்றும் பனிக்கான மஞ்சள் எச்சரிக்கை ஒரே நேரத்தில் இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
தெற்கு இங்கிலாந்து மற்றும் தென்கிழக்கு வேல்ஸ் பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு முதல் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள், வணிகங்கள் மற்றும் பயணத் தடைகள் ஏற்படுவதற்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை அலுவலகம் விடுத்துள்ளது.
கும்பிரியாவில், சனிக்கிழமை மாலை கடும் பனியால் சுமார் 7,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரத்தை இழந்தன.
இரவைக் கழிக்க சூடான இடங்களைத் தேட சாரதிகள் தங்கள் வாகனங்களை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.