செயற்கை நுண்ணறிவை (Artificial intelligence)பயன்படுத்துவதால், உலகில் 60 சதவீதமான வேலைகள் ஆபத்தில் காணப்படுவதாக, சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா – வாஷிங்டனில் நடைபெற்ற நிகழ்வில் அதன் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா இதனை தெரிவித்தார்.
எனினும், வளர்ந்து வரும் நாடுகளில் இந்த பாதிப்பு 40 சதவீதம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அதிகமான மக்களுக்கு நன்மைகளை உருவாக்க உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அவர் தெரிவித்தார்.