செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சுவீடன் கேளிக்கை பூங்காவில் திடீர் தீ; 12 பேர் காயம்

சுவீடன் கேளிக்கை பூங்காவில் திடீர் தீ; 12 பேர் காயம்

0 minutes read

சுவீடனின் மிகப்பெரிய கேளிக்கைப் பூங்காவில் இன்று (13) திடீரென தீ பரவியது.

கோத்தன்பர்க் (Gothenburg) நகரில் உள்ள Liseberg funfair கேளிக்கைப் பூங்காவில் கட்டப்படும் நீர் விளையாட்டு நிலையத்தில் இந்த தீ பரவியது.

இதில் 12 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றிய இளைஞர் ஒருவரை காணவில்லை.

கூடத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட தீ நிலையத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியதாகக் கேளிக்கைப் பூங்கா பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

நெருப்புப் பிழம்புகள் வெடிப்பதையும் நீர்ச்சறுக்கு ஒன்று தீப்பற்றி எரிவதையும் படங்களில் காணமுடிகிறது.

இதனை வேலையிட விபத்தாகக் கருதி, விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சுவீடன் பொலிஸார் தெரிவித்தனர்.

சுவீடன் கேளிக்கை பூங்காவில் திடீர் தீ; 12 பேர் காயம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.