பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராளுமன்றத்தை கலைப்பதாக ஞாயிற்றுக்கிழமை திடீரென அறிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் போது, தனது மையவாத கூட்டணியை தீவிர வலதுசாரிகள் முறியடித்ததை அடுத்து அவர் உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டதுடன், சட்டமன்றத் தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய சட்டமன்றத்திற்கான முதல் சுற்றுத் தேர்தல் ஜூன் 30ஆம் திகதியும், இரண்டாவது சுற்று ஜூலை 7ஆம் திகதியும் நடைபெறும் என்று மக்ரோன் அறிவித்தார்.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களின் முடிவு, “ஐரோப்பாவைப் பாதுகாக்கும் கட்சிகளுக்கு இது ஒரு நல்ல முடிவு அல்ல” என்று அவர் கூறினார்.