ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பதவிகளுக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
எனினும், பெல்ஜியம் – தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான இணக்கம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகளின் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளன.
இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.
இந்நிலையில், போர்த்துக்களின் ஆண்டனியோ கோஸ்டா, மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஆகியோரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளனர்.