ரஷ்யாவின் கிழக்குப் பகுதியை திடீரென 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது.
உள்ளூர் நேரப்படி, இன்று (18) காலை 7 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
கெம்சாட்கா (Kamchatka) எனும் தீபகற்பத்துக்கு அருகே நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அங்குள்ள கட்டடங்களைத் தீயணைப்பாளர்களும் மீட்புக் குழுவினரும் சோதனை செய்துவருகின்றனர்.
நிலநடுக்கத்துக்குப் பிறகும் அதிர்வுகள் ஏற்பட்டதாக ரஷ்யாவின் புவியியல் சேவைப் பிரிவு அதன் இணையத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து, அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை நிலையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், தற்போது சுனாமி அபாயம் குறைந்துவிட்டதாக அது கூறியிருக்கிறது.