செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தையிட்டியில் போராட்டக்காரர்கள் – பொலிஸார் முறுகல்!

தையிட்டியில் போராட்டக்காரர்கள் – பொலிஸார் முறுகல்!

1 minutes read
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக் கோரி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அந்தக் கட்சியினருக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் போக்கு ஏற்பட்டது.

இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. அத்தோடு, பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்திக் குவிக்கப்பட்டனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருந்தபோது உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை கட்டுமானத்தை அகற்றி, காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More