மாலைத்தீவுகளின் சுற்றுலாத் துறைக்கான தூதுவராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நடிகை கத்ரீனா கூறுகையில், “ஆடம்பரம் மற்றும் இயற்கை அழகின் உச்சம் மாலைத்தீவுகள். அங்கு நேர்த்தி அமைதியுடன் இணைகிறது” என்றார்.
“உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சின்னம், புகழ்பெற்ற கலைஞர் மற்றும் விருது பெற்ற தொழில்முனைவோர்” என்று மாலைத்தீவுகளின் சுற்றுலாத்துறை கத்ரீனாவைப் பாராட்டியுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாலைத்தீவுகள் வருகைக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதட்டங்கள் தணிந்துள்ளதை குறிக்கிறது.
