பாலஸ்தீனம் தனி நாடு என்று அதிகாரபூர்வமாக இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது.
காஸா போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் மறுத்ததைத் தொடர்ந்து அதை அறிவித்ததாக இங்கிலாந்து தெரிவித்தது.
காஸா போரை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாலஸ்தீனம் தனி நாடு என்று தான் அங்கீகரிக்கவுள்ளதாக இங்கிலாந்து கடந்த ஜூலை மாதம் மிரட்டல் விடுத்திருந்தது.
தொடர்புடைய செய்தி : பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க இங்கிலாந்து திட்டம்; இஸ்ரேல், பிணையக்கைதி குடும்பங்கள் கடும் எதிர்ப்பு
இங்கிலாந்தின் நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றுடனான உறவில் கசப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், கனடாவும் ஆஸ்திரேலியாவும் பாலஸ்தீன வட்டாரத்தை அதிகாரபூர்வ நாடாக ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன.
ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்தில் மேலும் பல நாடுகள் அவ்வாறு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.