இங்கிலாந்தின் மெர்சிசைட் பகுதியிலுள்ள பூட்டில் நகரில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22) ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், காயமடைந்த மற்றொரு நபர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 3.45 மணியளவில் குறித்த வீட்டில் தீ பரவியமை தொடர்பில் அவசரகால சேவைப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் நால்வர் உயிரிழந்த தகவலை தீயணைப்புப் பிரிவின் தலைமை அதிகாரி நிக் சியர்ல் உறுதிப்படுத்தியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஆறு தீயணைப்பு வாகனங்களுடன், 08 தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக வீட்டிற்குள் நுழைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும், உள்ளே இருந்தவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக ஈடுபட்டனர்.
இக்கோர தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து தீயணைப்புப் படையினரும் பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.