செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

ஆவலை தூண்டும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம்

1 minutes read

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பத்தா’ திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களிடம் தாக்கத்தை எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், படத்தை படமாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை தூண்டி இருப்பதாக திரை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, லிஜோ மோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அஜய் கோஷ், தீபா வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்..கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். 1980 களின் பின்னணியில் மதுரையை கதைக்களமாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த கொமர்சல் என்டர்டெய்னர் திரைப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோ, சினி 1 ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதல் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ‘பத்தா’ எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் அடாவடித்தனம், அடங்க மறுத்த தருணம் சட்டத்திற்கு விரோதமாக இயங்கிய தருணம், சிறை தண்டனை அனுபவிக்கும் தருணம், குடும்பஸ்தனாக மாறிய தருணம்  என ஒருவரது வாழ்வியல் சம்பவங்களை அந்தக் காலகட்டத்திற்குரிய வகையில் விவரிக்கப்பட்டிருப்பதால், படத்தைப் பட மாளிகையில் காண வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.