செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

1 minutes read

தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்புகளை வழங்கி முத்திரை பதித்த இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி- மாளவிகா மோகன்- ராஜ் பி. ஷெட்டி – ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை ஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டைலர் டர்டன் மற்றும் கினோஃபிஸ்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.டி. எழில் மதி மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனை படக் குழு பிரத்யேக காணொளி மூலம் உற்சாகத்துடன் அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தை பற்றிய அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘ஆரண்ய காண்டம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமிழ் சூழல் படைப்பாளி தியாகராஜன் குமாரராஜா- விஜய் சேதுபதி- மாளவிகா மோகன்- இசை ஞானி இளையராஜா – ஆகியோர் கூட்டணி அமைத்திருப்பதால் ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.