துருக்கியில் 3 மாதங்கள் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக, அந்நாட்டு அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
துருக்கியில் கடந்த 15ம் தேதி நடந்த நடந்த ராணுவ புரட்சி, மக்களின் கடும் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டுள்ளது. அதிபர் எர்டோகன், மக்கள் ஆதரவுடன், நாட்டை மீண்டும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். ராணுவ தாக்குதலில், 200 பேர் கொல்லப்பட்டனர்; 1,200 பேர் காயமடைந்தனர். புரட்சியில் ஈடுபட்ட, 2,839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
எர்டோகன் தலைமையில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில், அந்நாட்டு அரசியில் அமைப்பு சட்டம் 120ன் கீழ் அவரசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
மேலும் அவர் தனத அறிக்கையில், நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைககளை காப்பதற்காகவும், ஜனநாயகத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தலை அகற்றுவதற்காகவும் அவரசரநிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்தார். இதனையடுத்து 20ம் தேதி முதல் அடுத்த 3 மாதங்களுக்கு துருக்கியில் அவசரநிலை சட்டம் அமலில் இருக்கும்.