துணிச்சலான சாகசங்களை செய்யும் ரஷிய நாட்டைச் சேர்ந்த பெடர் கோன்யுகோவ் என்பவர், பலூனில் தனியாக உலகை சுற்றும் பயணத்தை கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியாவில் உள்ள நார்த்தம் நகரில் இருந்து தொடங்கினார்.
184 அடி உயரத்தில் பறக்கும் இந்த ஹீலியம் பலூன், அண்டார்டிகா பெருங்கடல் பகுதியை இரவு நேரங்களில் கடக்கும் போது, (-50C) மிகக் குறைவாக இருக்கும் வெப்பநிலையின்போது கவனமாக இல்வாவிட்டல் மரணத்தை விளைவிக்கும் ஆபத்து நேரிடக்கூடும்.
ஒரு மனிதனுக்கு மரணத்தை எளிதாக விளைவிக்கும் அளவுக்கு உறையவைக்கும் குளிருக்கும் இடையில், மனஉறுதியுடன் தனது பயணத்தை தொடர்ந்த பெடர் பயணத்தின் 11-வது நாளான இன்று ஆஸ்திரேலியாவின் நார்த்தாம் நகரின்மீது பறந்து தனது 34 ஆயிரம் கிலோமீட்டர் தூர உலக பயணத்தை இன்று நிறைவு செய்தார்.