இந்தி திரைப்பட நடிகர் ஆதித்ய பஞ்சோலி. இவர் மும்பை அந்தேரி மேற்கு, வெர்சோவா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2005-ம் ஆண்டு ஆதித்ய பஞ்சோலிக்கும் அவரது கட்டிடத்தில் வசித்து வரும் ஒருவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ஆதித்ய பஞ்சோலி அவரை சரமாரியாக தாக்கினார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் ஆதித்ய பஞ்சோலி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை அந்தேரி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்தநிலையில் இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு அளித்தனர்.
அப்போது ஆதித்ய பஞ்சோலிக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் ஆதித்ய பஞ்சோலி மேல் முறையீடு செய்ய அனுமதித்து அவரை மாஜிஸ்திரேட்டு ஜாமீனில் விடுவித்தனர்.