செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் புலனாய்வு துறையின் அறிவிப்பால் ஹிலாரிக்கு ஆதரவு அதிகரிப்பு | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்புலனாய்வு துறையின் அறிவிப்பால் ஹிலாரிக்கு ஆதரவு அதிகரிப்பு | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்

புலனாய்வு துறையின் அறிவிப்பால் ஹிலாரிக்கு ஆதரவு அதிகரிப்பு | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்புலனாய்வு துறையின் அறிவிப்பால் ஹிலாரிக்கு ஆதரவு அதிகரிப்பு | அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் திடீர் திருப்பம்

2 minutes read

அமெரிக்காவில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இ–மெயில் விவகாரத்தில் ஹிலாரி கிளிண்டன் எந்த தவறும் செய்யவில்லை என்று அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்தது. இதனால் கடைசி நேரத்தில் ஹிலாரிக்கு செல்வாக்கு அதிகரித்து உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் காண்கிறார். இதுவரை எடுக்கப்பட்ட கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனே முன்னணியில் இருந்து வருகிறார்.

டிரம்ப் மீது எழுந்த பாலியல் புகார்கள் தொடர்பாக அவருக்கு பாதகமான நிலை உருவானது. ஆனால், ஹிலாரி கிளிண்டன் வெளியுறவு மந்திரியாக இருந்தபோது 2008–ல் தனது அமைச்சகத்துக்குரிய இ–மெயில்களை தனது சொந்த இ–மெயில் முகவரிக்கு பயன்படுத்திக் கொண்ட பிரச்சினை சமீபத்தில் வெடித்தது.

இதுபற்றி அமெரிக்க புலனாய்வுத்துறையான எப்.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் என்றும் அறிவித்தது. இதனால் கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டன் வகித்த முன்னிலை சரியத் தொடங்கியது. அவருக்கும் டிரம்புக்கும் இடையேயான சதவீதம் மிகவும் குறைந்தது. ஹிலாரி கிளிண்டன் 2 சதவீதம் மட்டுமே முன்னணி பெற்றிருந்தார். எனினும் அவர் வெற்றி பெறுவது உறுதி என்று பல்வேறு கருத்து கணிப்புகளும் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் பி. கோமே, அமெரிக்க பாராளுமன்ற தலைவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ‘‘ஹிலாரி கிளிண்டனின் தனிப்பட்ட இ–மெயில் முகவரிக்கு வந்த 6 லட்சத்து 50 ஆயிரம் இ–மெயில்களையும் இரவு பகலாக எங்களது புலனாய்வுத் துறை மறு ஆய்வு செய்தது. அப்போது, அவர் மீது கிரிமினல் குற்றம் சாட்டும் அளவிற்கு எந்த தவறும் நடைபெறவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதனால் ஹிலாரி கிளிண்டன் புதிதாக எந்த வழக்கையும் எதிர்கொள்ள மாட்டார்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

இன்று ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அமெரிக்க புலனாய்வுத் துறை தலைவரின் இந்த திடீர் அறிவிப்பால் ஹிலாரிக்கு ஏற்பட்டு இருந்த லேசான பின்னடைவு தற்போது பெரும்பான்மை ஆதரவாக மாறி இருப்பதாக கருதப்படுகிறது.

இதனால் அவர் ஜனாதிபதி தேர்தலில் எளிதில் வெற்றி பெறுவார் என்று அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்.பி.ஐ.யின் இந்த அறிவிப்பால் அமெரிக்க பங்குச் சந்தை நேற்று ஒரு சதவீதம் ஏற்றம் கண்டது. தவிர ஆசிய நாடுகளில் அமெரிக்க டாலரின் மதிப்பும் அதிகரித்தது.

இதுபற்றி ஜனநாயக கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, ‘‘காலம் தாழ்த்திய நிலையில் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிவிப்பு வெளி வந்துள்ளது. இருந்தாலும் அது ஹிலாரிக்கு சாதகமாகவே அமையும். போட்டியில் இருந்து டிரம்ப் வெளியேறுவதற்கான கதவு திறந்துவிடப்பட்டு இருக்கிறது’’ என்று தெரிவித்தனர்.

அதே நேரம், குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப், பொங்கி எழுந்து விட்டார்.

மிச்சிகனில் நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘‘கடந்த 8 நாட்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் இ–மெயில்களை அமெரிக்க புலனாய்வுத் துறை மறு ஆய்வு செய்திருக்க இயலாது. தில்லு முல்லு அமைப்பால் ஹிலாரி பாதுகாக்கப்படுகிறார்’’ என்று ஆவேசமாக கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.