செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் 30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் அடிதடி சண்டை | விமானத்தை தரையிறக்கிய விமானி30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் அடிதடி சண்டை | விமானத்தை தரையிறக்கிய விமானி

30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் அடிதடி சண்டை | விமானத்தை தரையிறக்கிய விமானி30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் அடிதடி சண்டை | விமானத்தை தரையிறக்கிய விமானி

1 minutes read

பெல்ஜியம் நாட்டின் புருசெல்ஸ் நகரில் இருந்து மால்டாவிற்கு ரைனர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. விமானம் இத்தாலி நாட்டின் எல்லைக்குள் சுமார் 30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்தது.

அப்போது பயணிகளுக்கு இடையில் திடீர் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் விமானத்திற்குள் பரபரப்பு ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் அவர்களின் சண்டையை விலக்க முயற்றி செய்தனர். இதற்கு பலன்கிட்டவில்லை. இதனால் விமானத்தின் கதவை திறந்து விடக்கூடாது என்பதில் மற்ற பயணிகள் கவனமாக இருந்தனர்.

இதனால் சண்டையில் ஈடுபட்டவர்கள் அந்த பயணிகளையும் தாக்கினார்கள். அந்த சமயத்தில் சண்டையில் ஈடுபட்ட ஒருவர் பணிப்பெண்ணின் முகத்தில் ஒரு குத்துவிட்டார். இதற்குப் பிறகும் தாமத்திக்கக்கூடாது என்று பணிப்பெண்கள் விமானியிடம் சம்பவம் குறித்து தெரியப்படுத்தினார்கள்.

விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறங்க இருக்கிறது என்று. அதன்பின் ஒரு வழியாக சண்டை ஓய்ந்தது. விமானம் இத்தாலியில் உள்ள பிசாவில் தரையிறங்கியது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனர். சண்டையில் ஈடுபட்டவர்களை போலீசாரிடம் ஒப்படைத்த பின்னர் விமானம் மீண்டும் மால்டாவிற்கு புறப்பட்டுச் சென்றது.

விமானத்தில் நடைபெற்ற சண்டையை சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த சண்டை குறித்து அவர் கூறுகையில் ‘‘ஒரு வயதான பெண்மணி இருக்கையை மாற்றும்போது இந்த சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பெண்மணியின் தலையில் அடி விழுந்ததாக கூறினார். அந்தவேளையில் இரண்டு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்க முயற்சி செய்துள்ளனர். இதனால் சண்டை பெரிதாக வெடித்தது. விமானத்தின் கதவை திறக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணத்தில் விமானி விமானத்தை தரையிறக்கியிருக்கலாம்’’ என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.