செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தாய்லாந்து நாட்டில் தீபத் திருவிழா-விமானச் சேவை ரத்துதாய்லாந்து நாட்டில் தீபத் திருவிழா-விமானச் சேவை ரத்து

தாய்லாந்து நாட்டில் தீபத் திருவிழா-விமானச் சேவை ரத்துதாய்லாந்து நாட்டில் தீபத் திருவிழா-விமானச் சேவை ரத்து

1 minutes read

தாய்லாந்து நாட்டின் வடபகுதியில் ஆண்டுதோறும் மழைக்காலத்தின் முடிவில் தோன்றும் பவுர்ணமி நாளிரவில் இயற்கை அன்னைக்கு நன்றிகூறும் வகையில் வண்ணவண்ண காகிதங்களால் அலங்கரிக்கப்பட்ட தீபங்களை வானில் பறக்கவிடுவது வழக்கம்.

இவ்வகையில், கடந்த ஆண்டு வானில் மிதந்துசென்ற ஒரு தீபம், அவ்வழியாக பறந்துசென்ற ஒரு விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது.

இந்நிலையில், நாளை முதல் 16-ம் தேதிவரை நடைபெறவுள்ள தீபத் திருவிழாவையொட்டி சில விமானச் சேவைகளை ரத்து செய்தும், சிலவற்றின் நேரத்தை மாற்றியமைக்கவும் வடக்கு தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் சர்வதேச விமான நிலையம் தீர்மானித்துள்ளது.

தாய்லாந்து நாட்டின் பழம்பெரும் மன்னர் பூமிபோலின் மறைவுக்கு ஓராண்டு துக்கம் கடைபிடிக்க அரசு முடிவெடுத்துள்ள நிலையில் இந்த ஆண்டின் தீபத் திருவிழா அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற அசம்பாவித விபத்துகள் நேராமல் தடுப்பதற்காக பாங்காக் நகரில் இருந்து சியாங் மாய் நகருக்கு செல்லும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தாய் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.