செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்

அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் | ஆப்கானிஸ்தான்

1 minutes read

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான் மற்றும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிரான தாக்குதலில் உள்நாட்டு படைகளுக்கு உதவவும், பயிற்சி அளிக்கவும் அமெரிக்க படைகளும், நேட்டோ படைகளும் அங்கு உள்ளன.

இந்த படைகளை குறிவைத்து தலீபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு பக்ரம் என்ற இடத்தில் அமெரிக்க விமானப்படை தளம், உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டு கோட்டை போல இயங்கி வந்தது.

அந்த தளத்தில் நேற்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தினர். இந்த குண்டுவெடிப்பால் அந்தப்பகுதியே குலுங்கியது.

இதில் 4 பேர் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை நேட்டோ படை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் பற்றி, பக்ரம் நகர் அமைந்துள்ள பர்வான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் வாகீத் செதுக்கி கூறும்போது, ‘‘அமெரிக்க விமானப்படை தளத்தில் வீரர்கள் சாப்பிடுகிற இடத்தில், வெடிகுண்டுகள் கொண்ட பெல்ட்டினை இடுப்பில் அணிந்திருந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் நுழைந்து, குண்டுகளை வெடிக்கச்செய்திருக்கிறார். இதில் 4 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். அவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர் யார் என்று விசாரித்தபோது, விமானப்படை தளத்தில் வேலை செய்து வந்த உள்ளூர் தொழிலாளியாக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது’’ என்றார்.

பக்ரம் மாவட்ட கவர்னர் அப்துல் ஷாக்குர் குத்தூசி, ‘‘விமானப்படை தளத்தில் நடந்த குண்டுவெடிப்பு, மிகவும் சக்திவாய்ந்ததாகும். குண்டுவெடிப்பின்போது மிக பயங்கரமான சத்தம் கேட்டது’’ என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளின் தளபதியான ஜான் நிக்கல்சன், ‘‘குண்டுவெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு மிகச்சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்’’ என கூறினார்.

இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபிகுல்லா முஜாகித், ‘‘பக்ரம் விமானப்படை தளத்தினுள் நடந்த தாக்குதலை எங்கள் இயக்கத்தினர்தான் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது’’ என குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.