செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ்

நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ் நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு அடி–உதை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி தாக்குதல் | பாரீஸ்

1 minutes read

பாரீசில் தங்கி இருந்த இந்தி நடிகை மல்லிகா ஷெராவத்தை மர்ம மனிதர்கள் கண்ணீர் புகை வீசி அடித்து உதைத்து தாக்கினார்கள்.
பிரபல நடிகை
பிரபல இந்தி நடிகை மல்லிகா ஷெராவத். ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடித்து இருக்கிறார். கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ‘ஒஸ்தி’ படத்தில் சிம்புவுடன் கலாசலா கலசலா பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். ‘மித்’ என்ற ஆங்கில படத்தில் ஜாக்கிசானுடனும் நடித்து இருக்கிறார். மல்லிகா ஷெராவத்துகு 40 வயது ஆகிறது.
சில வாரங்களுக்கு முன்பு அவர் பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் சென்று இருந்தார். அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது ஆண் நண்பர் சிரிலுடன் தங்கி இருந்தார். வெளியில் ஷாப்பிங் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பியபோது அவரை பின் தொடர்ந்து மூன்று மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முகமூடி அணிந்து இருந்தார்கள்.
அடி–உதை
மல்லிகா ஷெராவத்தும் ஆண் நண்பரும் வீட்டுக்குள் நுழைந்து கதவை மூட முயன்றபோது முகமூடி மனிதர்கள் 3 பேரும் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே புகுந்தனர். அவர்கள் மல்லிகா ஷெராவத் மீது கண்ணீர் புகை வீசி அடித்து உதைத்தனர். ஆண் நண்பரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் மல்லிகாவிடம் இருந்த கைப்பையை பறிக்க முயற்சித்தனர். உடனே அவர் கூச்சல் போட்டு அலறினார்.
மல்லிகாவின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் திரண்டார்கள். உடனே மர்ம ஆசாமிகள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து மல்லிகா ஷெராவத் கூறும்போது, ‘‘நடந்த சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது’’ என்றார். மல்லிகா ஷெராவத்தை அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்று தெரியவில்லை.
நகை கொள்ளை
கடந்த மாதம் இதே பகுதியில்தான் அமெரிக்க டெலிவிஷன் நடிகை கிம் கார்தாஷியனை சிலர் தாக்கி அவரிடம் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கொள்ளையர்கள்தான் மல்லிகா ஷெராவத்தை தாக்கினார்களா என்றும் போலீசார் விசாரிக்கிறார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.