செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயார் | ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மெர்கல்ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயார் | ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மெர்கல்

ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயார் | ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மெர்கல்ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயார் | ஜெர்மனி அதிபர் ஏஞ்சலே மெர்கல்

1 minutes read

ஜெர்மனி நாட்டில் தற்போதையை அதிபராக இருப்பது ஏஞ்சலே மெர்கல். 62 வயது பெண்மணியான இவர் 2005-ம் ஆண்டு முதல் தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிபராக இருந்து வருகின்றார்.

இந்நிலையில் அடுத்த வருடம் ஜெர்மனியில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஏஞ்சலே மெர்கலின் கிறிஸ்டியன் ஜனநாயக யூனியன் கட்சி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய ஏஞ்சலே மெர்கல் ஜெர்மனியின் அதிபராக தொடர்ந்து 4-வது முறையாக பணியாற்ற தயாராக உள்ளதாக கட்சியினரிடம் கூறினார்.

முன்னதாக மெர்கலின் கட்சி கடந்த 2005, 2009 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் அந்த கட்சி தான் மீண்டும் வெற்றி பெற்றும் ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகைய நிலையில் அவர் மீண்டும் அதிபராக தயார் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவில் இன்னும் ஒரு பெண் அதிபர் கூட உருவாகாத சூழலில், ஜெர்மனி நாட்டின் அதிபராக ஒரு பெண்மணி கோலோச்சி வருவது பிரமிக்கத் தக்க விஷயமாகும்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.