செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு

வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு

0 minutes read

மெர்சர் என்ற நிறுவனம் உலகின் தலைசிறந்த நகரங்கள் குறித்த ஆய்வை சமீபத்தில் மேற்கொண்டது. மொத்தம் 231 நகரங்களை வைத்து மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரம் உலகின் தலைசிறந்த நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜுரிச் நகரமும், 3-வது இடத்தை நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரமும் 4-வது மற்றும் 5-வது இடங்களை ஜெர்மனியின் முனிச், கனடாவின் வான்கோவர் நகரங்களும் பிடித்துள்ளன.

ஆசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்தப் பட்டியலில் 25-வது இடத்தையும், அமெரிக்காவின் சான் பிரான்ஸ்சிஸ்கோ நகரம் இதில் 29-வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்திருக்கும் பாக்தாத் உலகின் மோசமான நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

தொடர்ந்து 8-வது வருடமாக வியன்னா இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.