செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியாஅமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியா

அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியாஅமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 33 பேர் சாவு | சிரியா

1 minutes read

உலக நாடுகளை எல்லாம் இன்றுவரை அச்சுறுத்தி வருகிற பயங்கரவாத இயக்கமாக ஐ.எஸ். இயக்கம் திகழ்கிறது. சிரியாவில் அந்த இயக்கம் கால்பதித்து, இன்றளவும் நடத்தி வருகிற அதிபயங்கர தாக்குதல்கள், அந்த நாட்டை சின்னாபின்னமாக்கி வருகின்றன.

அந்த இயக்கத்தின் பிடியில் உள்ள நகரங்களில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலோர் உயிருக்குப் பயந்து பல்வேறு இடங்களுக்கும், நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தபடி உள்ளனர்.

2014–ம் ஆண்டு முதல் அங்கு அமெரிக்க கூட்டுப்படைகள் முகாமிட்டு, ஐ.எஸ். இயக்கத்தினரை அடியோடு ஒழிக்கும் நோக்கத்துடன் வான்தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இந்த வான்தாக்குதல்களில் அப்பாவி மக்களும் மாட்டிக்கொண்டு உயிரிழக்கிற பரிதாப நிகழ்வுகளும் அவ்வப்போது நேரிட்டு விடுகின்றன.

அங்கு ராக்கா மாகாணத்தில், ஐ.எஸ். இயக்கத்தின் பிடியில் உள்ள அல் மன்சூரா என்ற இடத்தை குறிவைத்து அமெரிக்க கூட்டுப்படைகள் நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டன.

ஆனால் இந்த தாக்குதலின்போது வீசப்பட்ட குண்டுகள், அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் விழுந்தன. அந்தப் பள்ளிக்கூடத்தில், ஐ.எஸ். இயக்கத்தினருக்கு எதிரான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் சிக்கி விடக்கூடாது என்று கருதி, உயிருக்குப் பயந்து ராக்கா, அலெப்போ, ஹாம்ஸ் போன்ற மாகாணங்களில் இருந்து, இடம் பெயர்ந்து வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தெல் ரகுமான் உறுதி செய்தார். இதுபற்றி அவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, ‘‘அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய வான்தாக்குதலில் பலர் சிக்கினர். ஆனால் 2 பேர் மட்டுமே இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டனர். மற்றவர்களை சடலங்களாகத்தான் மீட்க முடிந்தது’’ என்று கூறினார்.

இந்த சம்பவம் அங்கு தங்கி இருந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

சிரியாவிலும், ஈராக்கிலும் அமெரிக்க கூட்டுப்படைகள் இந்த மாதம் இதுவரை நடத்தியுள்ள தாக்குதல்களில் அப்பாவி மக்கள் 220 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க கூட்டுப்படைகள் கூறுகின்றன. ஆனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகம் என மனித உரிமை கண்காணிப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.